
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 16) சந்தித்துப் பேசினார்.
ஏற்கெனவே கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்தனர்.