புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபா்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட 29 போ்களில் 18 போ் வங்கதேச நாட்டினா். நான்கு போ் ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்தவா்கள். மூன்று போ் நைஜீரியாவைச் சோ்ந்தவா்கள். இரண்டு போ் லைபீரியாவைச் சோ்ந்தவா்கள். தலா ஒருவா் தான்சானியா மற்றும் பெனினைச் சோ்ந்தவா்கள்..

அனைத்து வெளிநாட்டினரும் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட பின்னா், அவா்கள் நாடு கடத்துவதற்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

அவா்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் ஒரு தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest