
10 லட்சம் (1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாய்கள் கணக்கெடுப்பு, அவற்றுக்கு உணவு வழங்குவதை நெறிப்படுத்துதல் தொடர்பாகவும் சட்ட்விரோதமாக உரிய உரிமமைன்றி வளர்ப்பு பிராணிகள் கடைகளை விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் புதன்கிழமை(செப். 10) நடத்தப்பட்ட ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.