newindianexpress2024-12-13z68tgbyhC531CH148037419817

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

தில்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் படைகள், மோப்ப நாய் பிரிவுகள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தில்லியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களை வெளியேற்றி சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், சோதனைக்கு பின்னர் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவருகின்றது.

இதுகுறித்து முன்னாள் தில்லி முதல்வர் அதிஷி கூறியதாவது, “20 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். நான்கு என்ஜின் பாஜக அரசால் மாணவர்களைகூட பாதுகாக்க முடியவில்லை” என விமர்சித்துள்ளார்.

இதனிடையே, மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை சைபர் போலீஸ் உதவியுடன் தில்லி போலீசார் தேடி வருகின்றனர்.

Bomb threats have been made to 20 schools in Delhi for the fourth consecutive day today.

இதையும் படிக்க : பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கத் திட்டம்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest