Capture

நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களான துல்கர் சல்மான், பிருத்விராஜ் ஆகியோரது வீடுகளில் காலை முதல் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காரணம், சில மாதங்களுக்கு முன் பூட்டான் ராணுவம் 50க்கும் மேற்பட்ட ராணுவ கார்களை ஏலம் விட்டுள்ளது. இதில், நேபாளம் வழியாக 37 கார்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாம்.

முக்கியமாக, கேரளத்திற்குள் மட்டும் 20 கார்கள் கொண்டு வந்ததாகவும் அவற்றை நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கொச்சியிலுள்ள இருவரது வீட்டிலும் கார் வாங்கியதற்கான ஆவணங்களையும் வரிதொடர்பான விஷயங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கேரளத்தின் 30 பகுதிகளில் இதுதொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: அசைவம் சாப்பிட்டுவிட்டு காந்தாரா படத்திற்கு வரக்கூடாதா? ரிஷப் ஷெட்டி விளக்கம்!

sudden search operation going on actors dulquer salmaan and prithiviraj homes held by customs department

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest