
பிரதமர் நரேந்திர மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து, கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில்,
பிரதமர் மோடியை சந்தித்து எனது தொகுதியில் (தூத்துக்குடி) உள்ள பிரச்னைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் விவரித்தேன்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய விமான முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றியும் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதியில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார்.