Gwy29m-XIAEejeC

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்துப் பாா்வையிட்டார்.

மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார். மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 8 மணியளவில் சென்றடைந்தார். தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.

தூத்துக்குடியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழில் வணக்கம் எனக் கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கி ஹிந்தியில் பேசினார். மொழிப்பெயர்பாளர் உதவியுடன் அவரது உரை உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி

Thoothukudi: Prime Minister Modi inaugurates the new terminal building of Tuticorin Airport

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest