202507083446740

தெலங்கானா ரசாயன ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள சிகாச்சி மருத்துவ ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி உலை வெடித்து விபத்து ஏற்பட்டதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 16 தொழிலாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 2 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அக்லேஷ்வர் மற்றும் ஆரிஃப் ஆகியோர் நேற்று (ஜூலை 7) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, விபத்து நிகழ்ந்தபோது அந்த ஆலையில் சுமார் 143 தொழிலாளிகள் பணியிலிருந்ததாகவும்; அதில், 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 8 தொழிலாளிகள் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், பலியானோரின் குடும்பங்களுக்கு சிகாச்சி நிறுவனம் சார்பில் தலா ரூ.1 கோடி இழப்பீடாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The death toll in the Telangana chemical plant accident has reportedly risen to 44.

இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest