
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பையில் நகை வியாபாரம் செய்த கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி (66). இவரும் இவரது உறவினர் நீரவ் மோடியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதால், மெகுல் சோக்‌ஷி பெல்ஜியத்தில் வீட்டுக் காவலிலும், நீரவ் மோடி லண்டன் சிறையிலும் உள்ளனர்.