newindianexpress2024-11-240b0pakktC531CH13613717972

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிகாரில் ஜன்சுராஜ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,

“நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அதனை லாலு பிரசாத்திடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

அவரது மகன் 9 ஆம் வகுப்புகூட தேர்ச்சி பெறவில்லை. ஆனால், பிகாரின் அரசராக்க லாலு பிரசாத் விரும்புகிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக படித்துள்ளார்கள். ஆனாலும், பியூன் வேலைகூட கிடைக்கவில்லை.

தேர்தலின்போது, உங்களுக்கு தலைவர்கள் பணம் கொடுத்தால், மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் ரேஷன் அட்டை, நிலப் பதிவைப் பெற உங்களிடம் லஞ்சம் பெறப்பட்டதா? இல்லையா? உங்களிடமிருந்து கொள்ளையடித்ததை, இப்போது ரூ. 1,500, 2,000-ஆக கொடுக்கின்றனர். அது உங்கள் பணம்.

ஆனால், உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள். தலைவர்களுக்கு நாற்காலி கிடைக்கும்போது, மக்களுக்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துவதில்லை.

நீங்கள் எனக்கு வாக்களித்தால், நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால்தான், நான் வாக்கு கேட்பதில்லை. இருப்பினும், உங்களை வறுமையிலிருந்து மீட்கும் ஒரு தீர்வை நான் வழங்குவேன். அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest