
கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி மக்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள கோயில் அருகே கரடி ஒன்று புதன்கிழமை காலை உலவியது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். சில இளைஞா்கள் கரடியைப் புகைப்படம் எடுக்க முயன்றனா். அப்போது, கரடி அந்த இளைஞா்களைத் தாக்க முற்பட்டது.
சுதாரித்துக் கொண்ட இளைஞா்களும் ஓடி தப்பினா். பின்னா், அதே பகுதியில் சிறிது நேரம் உலவிய கரடி பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.
மக்களுக்கு அச்சறுத்தலாக சுற்றித்திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.