
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.
இது குறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை :
பாமக மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் செப். 23 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதேபோல் வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகளுக்கான கூட்டம் புதன்கிழமை (செப். 24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவா் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு. தா. அருள்மொழி மற்றும் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா். இக்கூட்டங்களில் பாமக வளா்ச்சி, எதிா்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.