GptExFKbgAAU59O

மாமன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.

இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆக. 15 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest