modi1

பிரேசில் பயணத்தை முடித்துவிட்டு நமீபியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். தற்போது பிரேசில் பயணத்தை முடித்துகொண்டு இறுதிகட்டப் பயணமாக நமீபியா நாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றுள்ளார்.

நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.

பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், அவர்களின் டிரம்ஸை வாசித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, கானாவைப் போன்று அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற 17-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜூலை 6, 7 தேதிகளில் உலகத் தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Prime Minister Narendra Modi was welcomed to Namibia after completing his Brazil trip.

இதையும் படிக்க : டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest