
-
‘தி கேரளா ஸ்டோரிஸ்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.
-
“ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு” என ஆணவக்கொலை பற்றி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் கமல் ஹாசன்.
-
ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது.

-
“எனது தைலாபுர வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது என் மகன் அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.” எனப் பேசினார் ராமதாஸ்.
-
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் (SIR) பிறகு பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அவரது பெயர் பட்டியலில் உள்ளதாக மறுமொழி தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
-
ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரையான YCT – 529 பக்க விளைவுகள் இல்லாமல் செயல்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் மதன் பாப் என்ற கிருஷ்ணமூர்த்தி சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
-
தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட தோனி, “முந்தைய தலைமுறையினரிடம் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. உணவு முறை நன்றாக இருந்தது. உடலில் எதாவது அசௌகரியம் தோன்றினால் உடனடியாகப் பரிசோதனை செய்யுங்கள். இப்போது மருத்துவத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. எளிதில் நோய்களைக் குணப்படுத்த முடியும்.” எனப் பேசினார்.

-
திண்டுக்கல் மாவட்டத்தில் தம்பியால் கொடூரமாக அறிவாள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் திருநங்கை சமந்தா. தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று (ஆகஸ்ட் 1) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு கூட்டத்தில் “நான் ஒருபோதும் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்” எனப் பேசிய ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்ததால்தான் மோடி தற்போது பிரதமராக இருப்பதாகவும், மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை அடுத்த சில நாள்களில் வெளியிடுவதாகவும் கூறினார்.
-
மோடியைச் சந்திக்க நேரம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதில் தான் பிரதமரைச் சந்திப்பது பாஜக மாநிலத் தலைவருக்கு பிடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Coolie இசை வெளியீட்டு விழா!
-
கூலி இசை வெளியீட்டு விழாவில், “என்னுடைய தந்தை பேருந்து நடத்துனராக இருந்தவர். அவருடைய ‘கூலி’ எண் 1421. அதே எண்ணைத்தான் இப்படத்தில் ரஜினி சாருக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். இது என் தந்தைக்கு நான் செலுத்தும் டிரிப்யூட்.” எனப் பேசியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
-
“எனக்கு ‘கூலி’ திரைப்படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. அதுபோல, என்னுடைய அப்பாவுக்கு ‘விக்ரம் திரைப்படத்தை கொடுத்ததற்கும் நன்றி.” என்றார் ஷ்ருதி ஹாசன்.
-
“‘கூலி’ திரைப்படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான். படத்துக்கு வானத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கு.” எனப் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.
-
“நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சார் மட்டுமேதான் காரணம்.
அவருடைய புன்னகை, கண்கள், அவரின் எனர்ஜி ஆகியவை எனக்கு பிடிக்கும். நான் கதையைக் கூட கேட்கவில்லை. பணம் கேட்கவில்லை.
தேதி விவரங்கள் பற்றிகூட கேட்கவில்லை. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும்தான் கேட்டேன்” எனப் பேசியிருக்கிறார் ஆமிர் கான்.