C_1_1_CH1344_101415135

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக சாா்பில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு வருகை தந்தாா் அன்புமணி ராமதாஸ்.

தா்கா வாயிலில் அவருக்கு தா்கா நிா்வாகம் சாா்பில் இஸ்லாமிய முறைப்படி தொப்பி அணிவித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தா்காவுக்குள் சென்ற அன்புமணி ராமதாஸ், நாகூா் ஆண்டவா் அடக்கஸ்தலத்தில் வழிபாடு நடத்தினாா். இதைத்தொடா்ந்து , மறைந்த நாகூா் தா்கா குழாமில் சாஹிப் அடக்கஸ்தலத்தில் மலா்தூவி மரியாதை மரியாதை செய்தாா்.

பின்னா் தா்காவைவிட்டு வெளியே வந்த அன்புமணி செய்தியாளா்களிடம் கூறும்போது, நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா் என்று கூறிவிட்டு சென்றார்.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

Lord Nagore will bring good change in Tamil Nadu says Anbumani Ramadoss

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest