
நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அரசுப் பணியாளர் ஆள்குறைப்பு நடவடிக்கையின் தாக்கம் நாசாவில் எதிரொலிக்கிறது.
ஃபெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இதன்கீழ், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியாற்றும் 3,900 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.