Gw7AaEYXUAESXoA

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும் பிகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது. ‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha, Rajya Sabha adjourned till 12 noon amid Opposition uproar as Chair rejects adjournment notices to discuss revision of electoral rolls in Bihar.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest