lokesh-kanagaraj-n-anirudh-to-turn-heroes-in-stunt-masters-duo-directionb1404230602

`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’.

இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

‘மோனிகா’ பாடல்
‘மோனிகா’ பாடல்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் ‘மோனிகா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “ பாடல்கள் என்று வரும் போது, அது முழுக்க முழுக்க அனிருத்தின் முடிவுதான்.  நான் அவரை முழுமையாக நம்புகிறேன்.

நானும், அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். மோனிகா பெலூசியின் உலகளாவிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஒரு அர்ப்பணிப்பு.

‘மோனிகா’ பாடல்
‘மோனிகா’ பாடல்

பூஜா ஹெக்டேவின் சிவப்பு நிற உடை, ‘மலேனா’ மற்றும் ‘ஸ்பெக்டர்’ படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது.  மோனிகா பெலூசி பாடலை இசையமைத்தப் பிறகுதான்  பூஜா ஹெக்டேவிற்கு மோனிகா என்ற பெயரையே வைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest