unnamed

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

 தெரு நாய்களின் தொல்லை தாங்கவில்லை என்று சொல்லுகிறார்கள். உண்மையில் தெரு நாய் மீது அக்கறை இருப்பவர்கள். அதற்கு தினசரி உணவு வைக்கிறார்களா? என்று யோசிக்க வேண்டி உள்ளது. இரவு நேரத்தில் வண்டியில் செல்லும்போது நாய் திடீர் என்று துரத்துகிறது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால்.  ஒரு நாய்  நாற்றம். இன்னொரு இடத்தில் இருக்கக்கூடிய நாய்க்கு வரும்பொழுது. வேறு ஒரு நாய் உள்ளே வருகிறது. என்று நம்பி அது வண்டியை துரத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

இரண்டு பக்கமும் பேச வேண்டியதாக இருக்கிறது. விஷத்தன்மை உடைய பூச்சிகள் விலங்குகள் வரும்போது அவற்றை விரட்டி, அவை கொல்லவும் செய்கிறது. பாதுகாப்பாக இதற்கு ஒரே வழியாக நான் என்ன நினைக்கிறேன் என்றால். தெரு நாய்களுக்கு தினசரி உணவு விட வேண்டும்.  நாயின் மீது அன்பாக  இருப்பவர்கள். அந்த நாய்க்கு சரியாக உணவிட்டு அதை வாரம் ஒரு முறை பராமரிக்கவும் செய்ய வேண்டும்.

தன் வீட்டு நாயைப் போல வாரம் ஒருமுறை தெருநாய்களை பராமரிக்க வேண்டும். அப்போதே இந்த மாதிரியான சிக்கல்கள் தீர்க்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு கொண்ட திட்டங்கள் கொண்டு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அது இல்லாமல் அதுவும் ஒரு உயிர்.

நேற்று இரவு எங்கள் வீட்டில் நாய் கரட்டாக ஒரு மணி அளவில் குறைத்துக் கொண்டே இருந்தது. என்னடா இது என்று எழுந்து சென்று பார்த்தேன். யாரோ ஒரு நபர் அடையாளம் தெரியாது நபர் உள்ளூர் காரர் அல்ல. அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை அது கடிக்க வில்லை ஆனால் அது குறைத்துக் கொண்டு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

இதுபோன்று நாய்கள் தெருவிற்கு ஏதேனும் புதிதாக நபர்கள் வந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்கிறது. இது மிகவும் எச்சரிக்கை செய்யக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு தனி நபரை வெறிபிடித்த நாய் தான் கடிக்கிறது. வண்டியில் குறுக்கே வருவது போன்ற சிக்கல்கள் ஏற்படுகிறது உண்மைதான். மனிதனால் உண்டாகக்கூடிய காரணிகள் மனிதன் நினைத்தால் எதையுமே விசாரித்து விடலாம். தெரு நாய்களும் ஒரு உயிர்தான்.

வீட்டு நாயைப் போல அவற்றையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு வெறி பிடிக்காமல் இருப்பதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். எனக்கு கல்லூரி நாட்களில் நிறையாக நியாபகம் இருக்கிறது. இரவு நேரம் காத்திருக்கும் பொழுது தினசரி வேலை முடித்து  மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் ஒரு ஐந்து வாங்கி தினமும் 50 ரூபாய்க்கு வாங்கி அதை ரோட்டில் நாய்களுக்கு வைப்பார்கள்.

பிஸ்கட்டுகளை தின்று கொண்டிருக்கும் பிஸ்கட் ஒரு நாள் கூட மீந்து போகாது. நாய்கள் எல்லாம் பசியோடு தெரிகின்றன. அவற்றின் பசியை போக்குவதற்கு மனிதர்களாகிய நாம் மனிதர்களே பசியோடு இருக்கிறார்கள் நாயின் பசிக்கும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக இவ்வாறான விலங்குகளுக்கு தேவையான உணவு அவற்றுக்கு ஏதேனும் நோய் வராமல் இருக்க தடுப்பூசி முதலியவை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதின் ஊடாக நாய்கள் வெறி பிடிக்காமல் நமக்கு காவலாக இருப்பதற்கான சாத்திய கூறுகள் அமைகின்றன. ஒரு நாய் வெறி பிடித்து கடிக்கிறது. வெறி பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்கூட்டியே அரசாங்கம் எடுத்துக்க வேண்டும். அவ்வாறு எடுக்கின்ற பொழுதே நாய்கள் நம்மோடு ஒரு சக நண்பனாக நமக்கு ஒரு காவலாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன்.

சு.தமிழ்ச்செல்வன்

திருவாரூர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest