bihardog1

பிகாரில் நாய் பாபு என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ், புகைப்படத்துடன், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட சான்றிதழ் வழஙகப்பட்டுள்ளது பிகாரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

பிகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ, வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணமல்ல, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 11 ஆவணங்களும் உண்மைத்தன்மைக் கொண்டது அல்ல என்றும், அதனையும் மோசடி செய்து எளிதாகப் பெறமுடியும் என்பதையும் உறுதிப்படுத்தவே, நாய் ஒன்றுக்கு அதன் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆர்டிபிஎஸ் இணையதளத்தில், பாட்னா அருகே உள்ள மசௌரியில், ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வைரலாகி வருகிறது.

அந்த சான்றிதழில், தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி, புகைப்படம் என்ற இடத்தில் நாயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ளது. இந்த சான்றிதழில், வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் உள்ளது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து வாக்குரிமையை உறுதி செய்வதில், அரசின் பின்னடைவும் இவ்வளவு கவனக்குறைவாக ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளின் மீதான கண்டனங்களும் வலுவடைந்துள்ளது. இப்படிப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் பெறப்படும் நிலையில், ஆதார் அட்டையும் குடும்ப அட்டையும் தகுதிச் சான்றிதழ்களாக ஏற்கப்படாதா என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த நாய் பெற்றிருக்கும் இருப்பிடச் சான்றிதழை, குடியுரிமைக்கான சான்றாக ஏற்று வாக்காளர் அட்டை வழங்கப்படும். ஆனால், குடும்ப அட்டையும் ஆதார் அட்டையும் போலி என்று அரசு நிராகரிக்குமா என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், அந்த நாய் வாக்காளராக வந்து பாஜகவுக்கு வாக்களிக்கும். அவர்கள் நாய் பாபுவை ஒருவேளை வேட்பாளராகக்கூட ஆக்குவார்கள், அது மட்டுமா அனைத்து பாஜக தொண்டர்களும் நாய் பாபுவுக்கு வாக்களிப்பார்கள். இது பாஜக, தேர்தல் முறையை மோசமாகக் கையாள்வதற்கு அப்பட்டமான உதாரணம். இது குற்றவியல் செயலில், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து கும்பலாக செயல்படுகிறது. இந்த குற்றங்களக்கு, நீதிமன்றங்கள் பக்கவாட்டில் நின்று ஜனநாயகத்தின் படுகொலையை தங்கள் மௌனத்தின் மூலம் ஆசிர்வதிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது.

நாய் பாபுவுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த சற்று நேரத்தில், அந்த சான்றிதழை ரத்து செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விண்ணப்பதாரருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், கணினி இயக்குநர், சான்றிதழ் வழங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும். இது குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒன்றும் தனித்துவமான சம்பவம் அல்ல என்றும், இரண்டு வாரங்களுக்கு முன்பு, சோனாலிகா டிராக்டர் என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ் அதுவும் டிராக்டர் போட்டோவுடன் வழங்கப்பட்டிருந்ததும், ப்ளூடூத் பெயரிலும் இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு தீவிர திருத்தம்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில்தான், வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்ற நபா்கள் (சட்டவிரோத குடியேறிகள்), ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ள பெயா்களை நீக்கி, தகுதியுள்ளவா்களை இணைப்பதாக கூறி தோ்தல் ஆணையம் அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த நடவடிக்கையின்கீழ், 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் 11 ஆவணங்களில் ஒன்றை உரிய காலத்துக்குள் சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களே இருக்கும் நிலையில் குறித்த காலத்துக்குள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அளிக்கும் அனைவரின் பெயரும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A residence certificate in the name of Nai Babu in Bihar, along with a photograph and a digitally signed certificate with the dog’s parents’ names, has caused a stir in Bihar.

இதையும் படிக்க.. தோழமையை முன்மொழிவோம்; தேவைப்பட்டால் கையை முறிக்கவும் தெரியும்: ராஜ்நாத் சிங்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest