
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை(ஆக. 5) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி இன்று (ஆக. 4) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை(ஆக. 5) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.