671d7d6d57d26

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

சக்தி திருமகன்
சக்தி திருமகன்

இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “அருண் பிரபுவின் அருவி, வாழ் படங்களின் ரசிகன் நான். என்னுடைய ஃபேவரெட் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இந்த சக்தித் திருமகன் படத்தின் டிரைலரை நான் ஆபிஸிலேயே பார்த்து மிரண்டேன்.

அதை வீட்டில் என் மனைவியுடன் பெரிய ஸ்கிரீனில் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் மனைவியைக் கவனித்தேன். அவர் ஒவ்வொரு ஃபிரேமாக கவனித்துப் பார்த்தார். ஆனால் எந்தக் கருத்தும் கூறவில்லை.

அவரிடம் டிரைலர் எப்படி இருக்கிறது எனக் கேட்டேன். சற்று மௌனத்துக்குப் பிறகு, ‘இயக்குநர் யார்?’ எனக் கேட்டார். நான் அருவி பட இயக்குநர் என்றேன். “அதான்…” எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நூறு சாமி போஸ்டர்
நூறு சாமி போஸ்டர்

அந்த ‘அதான்’ என்ற வார்த்தைக்குள் இருக்கும் பொருள் ஆழமானது. இந்த நம்பிக்கையை எல்லோர் மனதிலும் நிலை நிறுத்திவிட்டீர்கள் அருண் பிரபு.

மூன்று நிமிட டிரைலரில் 1.5 நிமிடங்களுக்கு மேல்தான் விஜய் ஆண்டனியைக் காண்பிக்கிறார். அதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

இது அரசியல் திரில்லர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதைவிட ஏதோ ஒன்று இருக்கிறது. வாழ்த்துக்கள் இந்தப் படம் பெரிய ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.

இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகனாகவும் விஜய் ஆண்டனி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான டைரக்டரோட சேர்ந்து நீங்கள் பயணித்துச் சிறப்பான படத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனியுடன் நூறு சாமிகள் படத்தை இயக்கியிருக்கிறேன். உங்களுக்கு பிச்சைக்காரன் படம் கொடுத்த உற்சாகத்தைவிட இந்தப் படம் ஒரு இன்ச் அதிகமாகவே கொடுக்கும்”

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest