
காத்மாண்டு: நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டது.
இந்த சூழலில் அங்கு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கலைந்து செல்லும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும் இதற்கு பலன் இல்லாமல் போனது. இந்நிலையில், இந்த போராட்டம், இளைஞர்கள் மீதான தாக்குதல், இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதல் என பல கோணங்களில் ‘நேபாள வன்முறை’ சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதை தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த யூடியூபர் ஹேரி.