
காத்மாண்டு: நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக நேபாளம் திகழ்கிறது.
அந்நாட்டின் சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.