G2PZcW9aIAA5Rwu

வருண் தேஜ் மற்றும் லாவண்யா த்ரிபாதி தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ஆண் குழந்தை பிறந்திருந்தது.

விஜயதசமி நாளான இன்று அவர்களுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியிருக்கிறார்கள்.

Varun Tej & Lavanya Tripathi
Varun Tej & Lavanya Tripathi

அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய குழந்தைக்கு வாயுவ் தேஜ் கோனிடேலா (Vayuv Tej Konidela) எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தப் பெயர் சூட்டும் விழா குறித்தான காணொளியில், “வேகம், வலிமை, பக்தி, ஆற்றல், மற்றும் ஆன்மிக ஒளியைக் கொண்ட பெயர். ஹனுமானின் ஆசீர்வாதத்தோடு எங்கள் மகனான வாயுவ் தேஜ் கோனிடேலாவை அறிமுகப்படுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வருண் தேஜும், லாவண்யா த்ரிபாதியும் இந்தப் பெயர் சூட்டும் விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா த்ரிபாதி தம்பதிக்கு கடந்த 2023-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

2017-ம் ஆண்டு வெளிவந்த `மிஸ்டர்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இந்தத் தம்பதியினர் இணைந்து நடித்திருந்தனர். அங்கிருந்துதான் இவர்களின் காதலும் தொடங்கியது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest