Welcure-Drugs

புதுதில்லி: வெல்கியூர் நிறுவனத்தின் வாரியமானது ஆகஸ்ட் 22 தேதியன்று ஒன்றுகூடி நிறுவனத்தின் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீடு குறித்த அறிவிப்பை பரிசீலிக்கும் என்றது.

பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், வெல்கியூர் நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில், அதாவது ஒரு பங்கை 10 பங்குகளாகப் பிரிக்கவும் முடிவு செய்துள்ளது.

பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு போனஸ் பங்கு பங்கை வழங்குவதற்கான திட்டத்தையும் வாரியம் பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது.

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான நிதி முடிவுகளைத் தொடர்ந்து, பணப்புழக்கத்தை மேம்படுத்துவதையும் பங்குகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.299.91 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ரூ.21.21 கோடியாக இருந்தது. 2025-26 முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.23.29 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest