
நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஜவான், டங்கி வெற்றிக்குப் பின் நடிகர் ஷாருக்கான் கிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.
இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சிகிச்சைக்காகத் தன் குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். பெரிய காயம் ஏற்படவில்லை என்றும் தசைப் பிடிப்பு காரணமாகவே சிகிச்சைக்கு சென்றுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பான் இந்திய கதைகளில் கவனம் செலுத்தும் பிருத்விராஜ்!