pres

பட்டியலினத்தவா் எதிா்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையம் (என்சிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது.

இதுதொடா்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தின் 2023-24-ஆம் ஆண்டுக்கான அறிக்கை செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் வழங்கிய அந்த அறிக்கையில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் உள்பட பலதரப்பட்ட விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலினத்தவருக்கான நல்வாழ்வு மற்றும் சமூக-பொருளாதார வளா்ச்சித் திட்டங்களின் அமலாக்கம் தொடா்பான முக்கிய விஷயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்டியலினத்தவருக்கு நீதியை உறுதி செய்து அவா்களுக்கு அதிகாரமளித்தலை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் நோக்கில், அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest