
நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல கஷ்டங்களுக்குக் காரணம், நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்வது என்கிற கணக்கு இல்லாமல் செலவு செய்பவர்கள், மாதக் கடைசியில் கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டி இருக்கிறது.
நம்முடைய செலவை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனில், என்ன செய்ய வேண்டும்?

செலவே செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற பதில் சரியானதல்ல. செலவு செய்யாமல் இருப்பதற்கல்ல நாம் சம்பாதிப்பது. நம் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை செலவு செய்து, வாழ்க்கையின் நல்ல விஷயங்களை அனுபவிக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்.
ஆனால், நமது பிரச்னை என்னவெனில், எதற்கு, எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமல், நிறைய செலவு செய்துவிடுகிறோம். உதாரணமாக, மாதச் சம்பளம் வந்தவுடன், சினிமாவுக்குப் போகிறோம்; பிரியாணி வாங்கி சாப்பிடுகிறோம். இது தவறல்ல. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதுதான். ஆனால், இந்த செலவுகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்குகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம்.
இப்படி நம் வாழ்க்கையில் எந்தெந்த செலவுகளுக்கு எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பதால்தான் பலரும் நிரந்தரமாக பணப் பற்றாக்குறையுடன் இருக்கிறார்கள். ஆனால், சரியாக பட்ஜெட் போட்டு செலவு செய்தால், உங்களுக்குப் பணப் பற்றாக்குறை என்பது இல்லாமல் இருப்பதுடன், எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைக் குறை இல்லாமல் சேர்க்கவும் முடியும்.
நம் அத்தியாவசிய செலவுகள், ஆசைகள், எதிர்கால இலக்குகளை நிறைவேற்றத் தேவையான பணத்தை எப்படி ஒதுக்கீடு செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வேண்டும் என்கிறவர்கள், இந்த பாட்காஸ்ட் வீடியோ லிங்கினைக் கிளிக் செய்து கேட்கலாம். அந்த லிங்க் இதோ: https://www.youtube.com/watch?v=ChrbKEE9884
இந்த பாட்கேஸ்ட் வீடியோவை முழுவதுமாக கேட்டு முடிக்க சுமார் 13 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த வீடியோவைக் கேட்டால், நீங்கள் பணப் பற்றாக்குறையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது நிச்சயம்!