m9xUbDjy

ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அன்னாபெல் சதர்லேண்ட், மூன்றாம் இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

முதலிடம் பிடிப்பாரா தீப்தி சர்மா?

கடந்த 6 ஆண்டுகளாக ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தீப்தி சர்மா 10 இங்களுக்குள்ளாக இடம்பெற்று வருகிறார். இருப்பினும், அவர் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றதில்லை.

டி20 போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 746 ரேட்டிங் புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் முதலிடம் வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் உள்ள தீப்தி சர்மாவுக்கும் (738 ரேட்டிங் புள்ளிகள்) சாதியா இக்பாலுக்கும் 8 ரேட்டிங் புள்ளிகளே வித்தியாசம். இதன் காரணமாக, தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் உத்வேகத்தில் தீப்தி சர்மா உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதன் மூலம், தீப்தி சர்மா தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Indian player has moved up to second place in the ICC T20 bowlers’ rankings.

இதையும் படிக்க: 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest