20092_pti09_20_2025_000030b073935

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, சக வீரா்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சனிக்கிழமை காலை வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் வரை பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் சனிக்கிழமை காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. பாதுகாப்புப் படையினா் தரப்பில் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் ட்ரோன், மோப்ப நாய்கள் உதவியுடன் மிகுந்த முன்னெச்சரிக்கையாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest