WhatsApp-Image-2025-08-08-at-20.03.34

பர்கூர் அருகே சிதலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது குடியிருப்புகளை புனரமைக்காமல் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் – ஜெகதேவி சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடி பழங்குடியின மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் அனைத்தும் தற்போது சேதமாகி உள்ளது. இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 3 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சிதலமடைந்த வீடு

இந்நிலையில், தங்களது வீடுகளை புனரமைக்கமால், சேதமான வீடுகளை அகற்றிவிட்டு ‘கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்’ புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கைக்குழந்தைகளுடன், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள் கூறும்போது, “நாங்கள், 100 நாள் வேலை திட்டம், காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் உள்ளிட்டவை சேகரித்து கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தனர். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 முதல் 4 குடும்பத்தினர் வசிக்கிறோம். இந்தத் தொகுப்பு வீடுகள் அனைத்தும் சிதலமடைந்து, 95 சதவீதம் சேதமாகி உள்ளது. இந்த சேதமான தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, தற்போது உள்ள குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.

சிதலமடைந்த வீடு

ஆனால், புதிய வீடுகள் கட்டித் தருவதற்குப் பதிலாக சேதமான வீட்டை புனரைமத்து தருவதாக அலுவலர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகுப்பு வீடுகள் சீரமைத்தாலும் பயன்படுத்த முடியாது. எனவே, சிதலமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த விளிம்பு நிலை மக்களின், தவிப்பை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest