vetrii

வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை அறிமுக பெண் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியாகி சர்சையானது. யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

இந்தப் படத்த்துக்கு பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது உள்பட பல விருதுகளை இந்தப் படம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date of the film Bad Girl, produced by Vetri Maran, has been announced.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest