7ccrn6qgsaroj-dubey-madhya-pradesh-man-dies-by-suicide-cyber-scam625x30006July25

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்குள்ள ரேவா என்ற இடத்தை சேர்ந்தவர் மனோஜ் துபே(65). செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த ஒன்றாம் தேதி மர்ம நபர் போன் செய்து தான் இந்தியன் ஓல்டு கம்பெனியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும் பழைய நாணயங்களை அரசாங்கம் விலைக்கு வாங்குவதாக தெரிவித்தார். துபே தன்னிடம் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருப்பதாக தெரிவித்தார். உடனே அவற்றை போட்டோ எடுத்து அனுப்பும்படி கூறினார்.

பணம்
பணம்

துபேயும் அவ்வாறு செய்தார். அதனை பார்த்துவிட்டு இதற்கு ₹65 லட்சம் கிடைக்கும் என்று மர்ம நபர் தெரிவித்தார். அதோடு முதல் கட்டமாக ₹.520 அனுப்பும்படி துபேயிடம் மர்ம நபர் கேட்டுக்கொண்டார். துபேயும் அவ்வாறு அனுப்பினார். அதன் பிறகு மர்ம நபர் துபேயிக்கு அடுக்கடுக்காக வாட்ஸ் ஆப் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். பணம் இருக்கும் சாக்குமூட்டைகளையும் வீடியோவாக அனுப்பினர். அந்த பணமூட்டைகள் உங்களுக்கு டெலிவரி செய்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறது என்று கூறி வீடியோ அனுப்பினர்.அதோடு வரி மற்றும் ஜி.எஸ்.டி செலுத்திய பிறகு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே துபே தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.37 ஆயிரத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பி வைத்தார். செக்யூரிட்டி தொகையாக மேலும் ₹.10 ஆயிரம் அனுப்பும்படி மர்ம நபர்கள் கேட்டனர். ஆனால் அப்பணம் துபேயிடம் இல்லை.

இதனால் ஏற்கனவே கொடுத்த பணமும் கிடைக்காமல் போய்விடும் என்று மர்ம நபர்கள் தெரிவித்தனர். எனவே துபே தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. அவரது மனைவி தனது குடும்ப உறுப்பினர்களிடம் தனது கணவர் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். மர்ம நபர்கள் ஒரு கட்டத்தில் ரூ.2 கோடி வரை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். அதோடு பணம் இருந்த பேக்கை வீடியோ எடுத்து துபேயிக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.

இதனால் 2 கோடி ரூபாய் கிடைக்க இருப்பதை குடும்பத்தினர் நம்ப மறுக்கிறார்களே என்று துபே கவலை அடைந்தார். அவரது மகள், மருமகன் கூட பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் யாரிடமும் பேசாமல் தனியாக தன்னை தனி அறையில் அடைத்துக்கொண்டார். அந்த அறையில் துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து துபே மனைவி நிர்மலா கூறுகையில்,” எனது கணவர் இறந்த பிறகும் மர்ம நபர்கள் போன் செய்தனர். பணத்துடன் வீட்டிற்கு வெளியில் ஆள் நிற்பதாக தெரிவித்தனர். நான் வெளியில் சென்று பார்த்தபோது யாரும் இல்லை” என்றார். கடந்த ஆண்டும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் இதேபோன்று தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசு இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest