bhavani_dam

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை(ஆக. 4) முழுக் கொள்ளளவை எட்டும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (03.08.2025) காலை 10 மணிக்கு 101.28 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை (04.08.2025) 102 அடியை எட்டும் என்றும் அணையில் இருந்து உபரி நீர், பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Flood alert issued as Bhavanisagar dam water level rises

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest