ANI_20250309215554

பாகிஸ்தானில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிருடன் புதைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை(செப். 20) மாலை பெயர்ந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்தின் உள்ளே இருந்த 9 குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க மீட்புக்குழுவினர் போராடினர். அதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்தனர். எனினும், பிறர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் பெய்த மழையால் விபத்துக்குள்ளான கட்டடத்தின் கட்டுமானம் சிதிலமடைந்திருந்ததாகவும் அதைச் சீரமைக்காமல் விட்டதே, கூரை இடிந்து விழ காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

Six children among eight buried alive after roof collapse in Pakistan’s Punjab

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest