
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குள் ஊடுருவ முயன்ற எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
ஃபிட்னா அல்-கவாஜ் தீவிரவாதிகள் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எலையைக் கடக்க முயற்சிப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பஜௌர் மாவட்டத்தின் லோவி மாமுண்ட் தாலுகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை காயமடைந்த நிலையில் லார்கோலோசோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
தீவிர வாதிகளின் ஊடுருவலைத் தக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஜூலை 2 ஆம் தேதி கார் தாலுகாவில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. அரசு வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தாசில்தார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காவலர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.