
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
லாகூா் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல மாவட்டங்களில் செவ்வாய் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது.
லாகூரில் புயலால் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 போ் உயிரிழந்தனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ், இளம் பெண்கள் அடங்குவா். ஃபைஸலாபாத்தில் மூவா், பாக்பட்டனில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள், பிற பகுதிகளில் 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, ஜூன் 26 முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து 116 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.