
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களில் இருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பஞ்சாபில் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்புகளினால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், சுமார் 4,500 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 22 லட்சம் மக்கள் மற்றும் 17 லட்சம் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, பருவமழை தீவிரமடைந்து பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பியும், முக்கிய அணைகள் திறக்கப்பட்டதாலும் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா – அமெரிக்க அமைச்சர்களின் பேச்சால் குழப்பம்!