
பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாதிய, மதவாத சக்திகள், வெளிப்படையாக சாதிய, மதவாதத்தைப் பேசுகிற அரசியல் கட்சிகள் தவிர மற்ற அனைத்தும் தோழமைக் கட்சிகள்தான்.
அவர்களுடன் எங்களால் இணைந்து பயணிக்க முடியும்.
திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஓபி.எஸ், தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
நடிகர் மதன் பாப் உடல் தகனம்
பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சி தான். கூட்டணி கட்சிகள் நல்லிணக்கத்தோடு தொகுதிகளை பிரித்து கொள்வோம், அதில் பிரச்னையில்லை. ஆணவ கொலைகளைக் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணி அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.