
மறைந்த அசாம் பாடகரின் ஸுபின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த பிரபல அசாம் பாடகர் ஸுபின் கார்க், ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த செப். 19 ஆம் தேதி பலியானார்.
அதன்பின்னர், அவரது உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டு குவாஹாட்டி மருத்துவ கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(செப். 23) காலை 7.30 மணியளவில் குவாஹாட்டி எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் 2-வது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஸுபினின் மறைவால் துக்கத்தில் மூழ்கிய ஏராளமான ரசிகர்கள், அவரது உடலைக்காண இரவு முழுவதும் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் ஸுபினின் உடலுக்கு பாரம்பரிய துணியான ‘அசாமிய கமோசா’ போர்த்தப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டது.

ஸுபினின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அர்ஜுன் போஹேஸ்வர் விளையாட்டு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அவரது உடலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, பூடான் மன்னர், பாடகர் பாபோன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர். கமர்குச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஸுபினின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
If there was one visual that captures the essence of the word “sea of humanity” – this would be it#BelovedZubeen pic.twitter.com/rLQvb7CazN
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 21, 2025
ஸுபினின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் கூடினர். இது தற்போது சாதனையாகவும் இடம்பெற்றுள்ளது. பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன், போப் ஃபிரான்சிஸ், ராணி எலிசபத்துக்கு பிறகு அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய பிரபலம் சென்ற சாதனையுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் ஸுபினின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஜுபின் கார்க்கின் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அனுசரிககப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், குவாஹாட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன.