pexels-photo-8693379_1745933464104_1745933480799-1

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்தியா முழுவதும் 38,000-க்கும் அதிகமான மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமாக வலம்வந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52).

இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற ‘வடகிழக்கு நிகழ்ச்சி’யில் பங்கேற்க சென்றபோது ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு செப்.19 ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸுபீன் கர்கின் உடல், மீண்டும் உடல்கூராய்வு செய்யப்பட்டு அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி போஹேஸ்வர் விளையாட்டு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஸுபீனுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சக்கணக்கான திரண்டனர்.

ஸுபீனின் மறைவையொட்டி, அசாம் மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அசாம் மாநிலத்தின் சோனாப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில், கர்க்கின் உடலை தகனம் செய்யும் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா பார்வையிட்டார்.

அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 10 பிக்கா (6.2 ஏக்கர்) இடத்தில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

Zubeen Garg memorial to be built in Jorhat: Assam CM

இதையும் படிக்க… பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest