
‘பாமகவின் தலைவர் நானே’ என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.
ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம், கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் என நடத்தி வருகிறார்.
இன்னொரு பக்கம், அன்புமணியும் நிர்வாகிகள் கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ராமதாஸ் தமிழ்நாடு டி.ஜி.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது…
“எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
எனது சமூக வலைத்தளக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
அவற்றை மீட்டெடுப்பதற்குத் தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதனால், என்னுடைய சமூக வலைத்தளக் கணக்குகளை மீட்டுத் தர வேண்டும்”