
நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தம்மாவடியில் நடைபெற்ற படபிடிப்பில் சண்டைப் பயிற்சி கலைஞர் ராஜு உயிரிழந்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா நடிக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தைச் சுற்றிய ஊர்களில் நடைபெற்று வருகிறது.

இன்று எடுக்கப்பட்ட கார் ஸ்டண்ட் காட்சியில், பணியாற்றும்போது ஏற்பட்ட விபத்தில் மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டரின் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினரிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில், “இன்று காலை ஆர்யா மற்றும் ரஞ்சித்தின் படப்பிடிப்பில் கார் கவிழும் காட்சியை எடுக்கும்போது ஸ்டண்ட் கலைஞர் ராஜு உயிரிழந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவருடன் நீண்டநாள் பழக்கம் உள்ளது. எனது படங்களில் மிகவும் ரிஸ்கான ஸ்டண்ட்களைச் செய்துள்ளார். மிகவும் தைரியமான ஆளுமை அவர். அவரது இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு கடவுள் மேலும் வலிமை அளிக்கட்டும். இந்த ட்வீட் மட்டுமல்ல, இதுவரை அவர் படங்களுக்கு அளித்த பங்களிப்புக்காக அவரது குடும்பத்தின் எதிர்காலத்துக்காக திரைத்துறை அவர்கள் பக்கம் நிற்கும். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்வீட் செய்திருந்தார் விஷால்.
So difficult to digest the fact that stunt artist Raju passed away while doin a car toppling sequence for jammy @arya_offl and @beemji Ranjith’s film this morning. Hav known Raju for so many years and he has performed so many risky stunts in my films time and time again as he is…
— Vishal (@VishalKOfficial) July 13, 2025
ஸ்டண்ட் கலைஞர் சில்வா, “எங்கள் சிறந்த கார் ஜம்பிங் ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவரான எஸ்.எம். ராஜு இன்று கார் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது காலமானார்.
ஸ்டண்ட் கலைஞர்கள் யூனியனும் இந்திய திரைப்படத்துறையும் அவர் பிரிவால் தவிக்கும்…” என ட்வீட் செய்துள்ளார்.
One of our great car jumping stunt Artist S M Raju Died today while doing car stunts RIP
Our stunt union and Indian film industry ll be missing Him pic.twitter.com/9Qr7Zg8Dbb— silva stunt (@silvastunt) July 13, 2025
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…