
பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் வெள்ளிக்கிழமை பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புர்னியா சந்திப்பின் நிலைய மேலாளர் முன்னா குமார் கூறுகையில், கதிஹர்-ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இருட்டாகவும், வானிலை மேகமூட்டமாகவும் இருந்ததால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்
இதனிடையே பலியானோரின் குடுத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார். விபத்தில் பலியானவர்கள் 14-18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கஸ்பா தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.