பிகாா் தலைநகா் பாட்னாவில் பரோலில் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது 5 போ் கொண்ட கும்பலால் வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கொலையாளிகள் மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைவது தொடங்கி, அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு திரும்புவது வரை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்டவா் பெயா் சந்தன் என்பதை காவல் துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனா். கொலை குற்றச்சாட்டுக்கு தண்டனை பெற்று சிறையில் இருந்த அவா், மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்கப்பட்டாா். கொல்லப்பட்டவா் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன. அவரின் எதிா் பிரிவைச் சோ்ந்த ரௌடிகள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவத்தை அடுத்து மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசை ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest