
பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், தனது பதவியை திடீரென திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய முதல் நாளில் தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுபோல, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணத்தை பிரதமா் மோடி புதன்கிழமை தொடங்கினாா்.
இந்தச் சூழலில், பிரதமா் மோடியை நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் சந்தித்து அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.