
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) மாலை 5 மணியளவில் மக்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அதில், அவர் ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரம் வருமான வரியில் தளர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இந்த நிலையில், பிரதமர் இன்று மாலை நாட்டு மக்களுடன் உரையாற்றப் போகிறார் என்று பரவலாக ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு அரசால் மக்களிடம் அந்தச் செய்தி கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடி பெரிதாக எதையோ சொல்லப் பொகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவர் அப்படியொன்றும் புதிதாக சொல்லவில்லை. இதனால் மக்களுக்கு ஏமற்றமே மிஞ்சியது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பேசும்போது, “அவர்கள்(அரசு) நாட்டு மக்களிடம் கொள்ளையடித்தனர். ஆனால் இப்போது, வரியில் தளர்வுகளை அறிவித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
அமெரிக்காவால் எச்-1பி விசாவுக்கான கட்டணம் 1,00,000 டாலராக உயர்த்தப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல, பரஸ்பர வரி விதிப்பு விவகாரம் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்தனர்.
இந்த நாட்டில் வேலைவாய்ப்பற்ற நமது சகோதர சகோதரிகளும் வேலைவாய்ப்புகளைக் குறிப்பிட்டு பிரதமர் பேசுவார் என்று காத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி இன்று பேசியிருப்பதில் புதிய விஷயங்கள் ஒன்றுமேயில்லை” என்றார்.
இதையும் படிக்க: வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி