modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பழமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. நமீபியாவின் அதிபர் நெடும்போ நந்தி டைய்த்வாஹ் இந்த விருதை அவருக்கு அளித்தார்.

இது பிரதமர் மோடி பெறும் 27வது சர்வதேச விருதாகும். இதேபோன்று தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் இவர் பெறும் 4வது விருது இதுவாகும்.

இந்த விருது வழங்கும் விழாவில் நமீபியாவின் அதிபர் டைய்த்வாஹ் பேசியதாவது,

நமீபியா மட்டுமின்றி உலகளவில் சமூக பொருளாதார முன்னேற்றம், அமைதி மற்றும் நீதியை மேம்படுத்துதல் போன்ற செயல்களில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மிகப் பழமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது அளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

விருதை பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது,

நமீபியாவின் மிக உயரிய விருது எனக்களிக்கப்பட்டதை பெருமையாகவும் கெளரவமாகவும் கருதுகிறேன். நமீபியாவின் அதிபர், அரசாங்கம் மற்றும் நமீபியா குடிமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest